பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் கோர விபத்து - பலர் வைத்தியசாலையில்
Sri Lanka Police Investigation
Accident
Sri Lankan Schools
School Children
By Thulsi
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (03.03.2025) காலை 6 மணியளவில் குருவிட்ட ( Kuruvita) - எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் எரத்ன பிராந்திய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் அவர்களில் இருவர் இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு (Teaching Hospital - Ratnapura) மாற்றப்பட்டுள்ளனர்.
மாணவர்களில் இருவரை இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியிருந்தாலும், வேறொரு வைத்தியசாலையிலிருந்து ஆம்பியூலன்ஸ் வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி