12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Death
By Raghav
மதுரங்குளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுனு ஏரியில் 12 வயது சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (15.08.2025) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவன், தனது மாமியுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கியுள்ளார்.
அவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரங்குளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
📌 முன்னெச்சரிக்கை அறிவிப்பு : இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, குளங்கள் மற்றும் ஆறுகளில் நீராடும்போது பொதுமக்கள், குறிப்பாக சிறுவர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். |
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்