கொழும்பு சட்டவிரோத நிதி மோசடி ; 120 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்
கொழும்பு - ராஜகிரிய பகுதியில் சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 120 வெளிநாட்டு நபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (03.05.2026) இந்த வழக்கு இடம்பெற்ற நிலையில் சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்து, சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்படி, குறித்த குடியிருப்பின் பல மாடிகளை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து இந்த மோசடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சீனா, வியட்நாம், மலேசியா, மடகாஸ்கர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |