விபத்துக்களில் ஆண்டுக்கு 12000 உயிரிழப்பு - மீளாய்வு செய்ய குழு நியமனம்
Sri Lanka
Accident
By Pakirathan
நாட்டில் ஏற்படுகின்ற விபத்துக்களை மீளாய்வு செய்வதற்காக விசாரணைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் விபத்துக்கள் மூலமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோா் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக வைத்திய நிபுணர் சமித்த சிரிதுங்க கூறியுள்ளார்.
இதேவேளை, ஒவ்வொரு வருடமும் 10,000 முதல் 12,000 பேர் வரையில் விபத்துக்களினால் உயிரிழப்பதாக அவா் தெரிவித்துள்ளார்.
