12 ஆவது யாழ் - சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்! (படங்கள்)
jaffna
start
12th Jaffna International Trade Fair
By Vanan
12 ஆவது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் சந்தை நேற்றைய தினம் (21) யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தை எதிர்வரும் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
யாழ். வர்த்தக சங்கம் மற்றும் கைத்தொழில் சம்மேளனம் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை வடக்கில் உள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு சிறந்த அடித்தளமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



