ரணிலின் அதிபர் தேர்தலுக்கான தந்திரமே 13 ஆவது திருத்தம் - சிறிதரன் காட்டம்
ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தான் அதிபராக வருவதற்கே 13ஆம் திருத்தச்சட்டத்தினை கொண்டுவருவது போல் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றார்.
அவர் அரசியல் தீர்வெதனையும் பெற்றுத் தரப்போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் புதிய நிர்வாகத்தெரிவு கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சி அலுவலகத்தில் இன்று ( 13.08.2023 ) நடைபெற்று முடிந்தது.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ரணிலின் தந்திரோபாயம்
மக்களை எப்போதும் ஒரு குழப்பத்தில் வைத்திருப்பதே அவரின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.


இவ் நிர்வாகத் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வேலமாலிதன் மற்றும் முன்னாள் வடமாகான கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் 100 ற்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.