அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் நாட்டின் நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் - சமன் ரத்னப்பிரிய

13th amendment Sri Lanka Parliament Ranil Wickremesinghe Sri Lanka
By Beulah Aug 22, 2023 02:55 AM GMT
Report

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் இந்த நாட்டின் நாடாளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட ஒரு சட்டம். அதனால் அதனை புறக்கணித்து நடப்பதற்கு நாடாளுமன்றத்துக்கு முடியாது என அதிபரின் தொழிற்சங்க பணிப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்றை தினம்(21) ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்திக்கு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் நாட்டின் நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் - சமன் ரத்னப்பிரிய | 13 Amendment Sri Lanka Parliment

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்ககையில்,

“இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அதிபர் ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டை கூட்டி, கட்சிகளின் கருத்துக்களை கேட்டிருந்தார்.

என்றாலும் இந்த கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி கலந்துகொண்டிருக்கவில்லை. நாட்டின் பிரச்சினைக்கு மக்கள் விடுதலை முன்னணியினாலே தீர்வுகாண முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இனப்பிச்சினைக்கு தீர்காண ஆலோசனை வழங்குமாறு அழைத்தால் அதில் கலந்துகொள்வதில்லை. அவர்களுடைய ஆட்சியிலேயே பிரச்சினைக்கு தீர்வு இருப்பதாக தெரிவிக்கின்றனர். அப்படியானால் அது ஒருபோதும் இடம்பெற முடியாத ஒன்றாகும்.

நாட்டின் அபிவிருத்திக்கு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் அத்தியாவசியமான ஒன்றாகும். இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

அதனால்தான் அதிபர் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சித்து வருகிறார் அதேநேரம் 13ஆம் திருத்தம் தொடர்பாக அதிபர் தனது கருத்தை நாடாளுமன்றத்துக்கு முன்வைத்திருக்கிறார்.

அது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தற்போது தெரிவிக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் அது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும்.

அதனை செயற்படுத்த வேண்டும் அல்லது நாடாளுமன்றம் அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் 13ஆம் திருத்தம் தொடர்பில் சிலர் கூட்டம் நடத்தி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்ன கருத்துக்களை தெரிவித்தாலும் அது நாட்டின் சட்டம் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு சட்டத்தை செயற்படுத்தாமல் இருப்பது என்பது சட்டத்தை மீறிய பாரிய குற்றமாகும் என்பதனையும் நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதனால் 13ஆம் திருத்தத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கான உரிமைகளை நாங்கள் வழங்க வேண்டும். அதனை தடுக்க முடியாது. தற்போதைக்கு செயற்படுத்த முடியுமான விடயங்களை செயற்படுத்துவதற்காகவாவது நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.   

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி