மருந்து உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய 13 பில்லியன் தொடர்பில் வெளியான தகவல்
அரசாங்க வைத்தியசாலைகளுக்கு கடந்த வருடம் எடுக்கப்பட்ட மருந்துகளுக்காக 13.14 பில்லியன் ரூபாவை மருந்து விநியோகஸ்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டுமென சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன நேற்று (12) நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
அத்தியாவசிய மருந்துகள்
“மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுகளின்படி, 850 வகையான அத்தியாவசிய மருந்துகள் உள்ளன.
அவற்றில் 60 மருந்துகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறை இருப்பதோடு, இந்த மாதத்திற்குள் 30 அத்தியாவசிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 170 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதால், இந்த வருடத்தில் நிலுவையில் உள்ள கட்டணங்கள் செலுத்தப்படும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |