யாழ் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு 13 மணி நேர மின்வெட்டு : வெளியான அறிவிப்பு
வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் நாளைய தினம் (26) 13மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபை (CEB) அறிவித்துள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா – மன்னார் 220 கிலோவாட் மின்பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைகளிற்காக, வடமாகாணத்திற்கான 132 கிலோவாட் வவுனியா - புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது துண்டிக்கப்படவுள்ளதால் இந்த மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மின் இணைப்பு மீள வழங்கப்படும்
அத்துடன் வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

இதேவேளை எதிர்பார்த்ததை விட வேலை முன்னதாகவே முடிந்தால், திட்டமிடப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே மின்சாரம் வழங்கப்படும் என மின்சாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்