மாலைதீவு கடலில் 13 இலங்கை மீனவர்கள் கைது
Maldives
Sri Lanka Fisherman
By Sumithiran
மாலைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 13 பேர் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு படகில் 7 மீனவர்களும், மற்றொரு படகில் 6 மீனவர்களும் இருந்த நிலையில் மாலைதீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி கைது செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இரண்டு படகுகளும்
இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லது துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நூராத்தீன் என்ற கடலோர காவல்படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைதீவு கடற்பரப்பில் இந்திய மற்றும் இலங்கை மீன்பிடி படகுகள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது வழமை என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்