சாதனைச் சிறுவன் தன்வந்தை கூடி வரவேற்றது தமிழர் தலைநகர்
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த 13வயது சிறுவன் தன்வந்தை திருகோணமலை மாவட்டத்திற்கு வரவேற்கும் நிகழ்வு இன்று (04) காலை இடம்பெற்றது.
இன்று காலை அவர் கல்வி கற்ற திருகோணமலை இ.கி.ச ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி சமூகத்தினரால் அவர் வரவேற்கப்பட்டு அங்கு ஒரு பாராட்டு நிகழ்வும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து திருகோணமலை நகர பாடசாலைகளும் அவரை வரவெற்று கௌரவித்து தமது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
சாதனைச் சிறுவன் தன்வந்த்
இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான 30கிலோ மீற்றர் தூரத்தினைகொண்ட பாக்கு நீரிணையை மிகக் குறைந்த வயதில் வேகமாக கடந்து தன்வந்த் சாதனை படைத்தார்.
திருகோணமலையை சேர்ந்த 13 வயது மாணவன் ஹரிகரன் தன்வந்த் 01.03.2024 திகதி இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் இடையான பாக்கு நீரிணையை 09.32 மணித்தியாலயத்தில் நீந்தி இலங்கையில் வேகமாக கடந்து முடித்த சாதனையை படைத்தார்.
இதற்கு முன் தனது பயிற்றுவிப்பாளர் ஆன ரொசான் அபயசுந்தர 09.58 மணி நேரத்திரல் கடந்த சாதனையை முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.
சாதனைப் பயணம்
அதி காலை 12.05 மணிக்கு தனுஷ்கோடியில் தொடங்க இருந்த சாதனைப் பயணம் கடல் கொந்தளிப்பு காரணமாக காலை 04.15 மணிக்கு ஆரம்பமாகி தலைமன்னார் பியர் எனும் இடத்தை மாலை 13.47 மணியளவில் சென்றடைந்தார்.
பாக்கு நீரிணையை கடந்த 6 வது நபராகவும், மிகக் குறைந்த வயதில் பாக்கு நீரிணையை கடந்தவராகவும் சாதனை படைத்துள்ளார்.
4 வருடங்களுக்கு மேல் நீச்சல் பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர், அடுத்த இலக்காக நீண்ட தூர நீச்சல் பயணங்களில் ஈடுபடதல் தனது இலக்காக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |