13 வருட கட்டாயக் கல்வி வரை மாணவர்கள் பாடசாலை வருவது கட்டாயம் - ஹரிணி அமரசூரிய வலியுறுத்தல்
உயர்தர மற்றும் சாதாரண தர வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது கட்டாயம் எனவும், மாணவர்கள் 13 வருடங்கள் கட்டாயக் கல்வியைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயர் வகுப்புகளில் கல்வி பயிலும் தமது பிள்ளைகளைத் தொடர்ச்சியாகப் பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அக்கரைப்பற்று முஸ்லிம் தேசியப் பாடசாலையின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று (15.11.2026) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று முஸ்லிம் தேசியப் பாடசாலை
மேலும், 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் கல்விக்காக 749 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 562.4 பில்லியன் ரூபாய் பாடசாலைக் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்புகளின் ஊடாக மாணவர்களின் அறிவு, தொழில்நுட்பத் திறன், சமூகத் திறன்கள் மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெற்றோர்களை இறுதிவரை பாதுகாத்தவர் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |