சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இன்று வல்வெட்டித்துறையில்!
தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான M.K. சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இன்று (16-11-2026) இடம்பெறவுள்ளது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் காலை 10.00 மணிக்கு அவர் வசித்து வந்த வல்வெட்டித்துறை, நெடியகாடு, கல்றோட் வீதியிலுள்ள இல்லத்தில் நடைபெறும்.
இதையடுத்து, நண்பகல் 12.00 மணியளவில் வல்வெட்டித்துறை சந்தியில் அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி உரைகளும் இடம்பெறும்.
பின்னர், அன்னாரின் பூதவுடல் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
அன்னாரின் பூதவுடல் தற்போது வல்வெட்டித்துறை, நெடியகாட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |