கடந்த 24 மணிநேரத்தில் 1,353 பேர் கைது! பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
arrest
corona
people
By Shalini
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,353 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் அதிகளவானோர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டத்தை மீறுவோரை கைது செய்ய சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக சிறப்பு இராணுவ புலனாய்வுப்பிரிவு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி நேற்று அறிவித்திருந்தார்.
ஆகவே அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வீட்டிலிருந்து வெளியே செல்வதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்