13 ஆவது திருத்தம் : ரணிலின் நிலைப்பாடு வெளியானது
13 ஆவது திருத்தத்தில் உள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படமாட்டாது என்பதே அதிபர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடென ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கான நிரந்தர வீட்டு உறுதிப்பத்திரங்கள் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் காரணமாகவே
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் காரணமாகவே என்னால் மாகாண முதலமைச்சராக செயற்பட முடிந்தது.

நாம் ஒரு நாட்டின் அடிப்படையில் உயர வேண்டுமானால், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இதைச் செய்ய முயலும்போது, தீவிரவாதிகள் எங்களின் கால்களை இழுத்துச் செல்கின்றனர்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் தீவிரவாதிகள் தமது அரசியல் பிழைப்புக்காக நாட்டை முன்னோக்கி நகர்த்துவதைத் தடுத்து நிறுத்துவதற்கு செயற்படுகின்றனர்.