தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகள் : அமெரிக்காவின் கபட நாடகம் அம்பலம்
தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வோஷிங்டன் கோரவில்லை என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
"எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் படைகளைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று நாங்கள் அறிவித்துள்ளோம். மேலும், இந்தத் தருணம் வரை - இது ஒரு ராஜதந்திர சாதனையாகும்
அமெரிக்காவிடமிருந்து எந்தக் கோரிக்கையும் இல்லை
லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று அமெரிக்காவிடமிருந்து எந்தக் கோரிக்கையும் இல்லை," என்று டெல் அவிவில் நடைபெற்ற உள்ளூர் தலைவர்களின் மாநாட்டில் அளித்த பேட்டியில் காட்ஸ் கூறினார்.

அமெரிக்காவிடமிருந்து அத்தகைய கோரிக்கை வந்தால், இராணுவம் அதற்கு இணங்குமா என்று கேட்கப்பட்டபோது, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்திடம் தான் கூறியதாகவும், அதே நேரத்தில் நெதன்யாகு ட்ரம்பிடம், "நாங்கள் வடக்கின் குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கவே அங்கு இருக்கிறோம்" என்று கூறியதாகவும் காட்ஸ் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 13 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்