வெளிநாடொன்றில் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ! 14 பச்சிளங்குழந்தைகள் பலி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (PIMS) மகப்பேறு வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 14 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
இன்றையதினம்(26) புதன்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது வார்டில் இருந்த 15 குழந்தைகளில் ஒரு குழந்தை மருத்துவரால் காப்பாற்றப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்துக்குக் காரணம்
இந்த விபத்து நடந்தபோது பிரசவித்த தாய்மார்கள் ஜன்னல்கள், ஏணிகள் மற்றும் படிகள் வழியாகச் சென்று உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

Image Credit: japantimes
மகப்பேறு வார்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாக பணிப்பாளர், குழந்தைகள் திருடப்படுவதைத் தடுப்பதற்காகவே பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பழுதடைந்த குளிரூட்டும் கருவி (A/C) வெடித்ததே தீ விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், அங்கு பயன்படுத்தப்பட்ட ஒட்சிசன் சிலிண்டர்கள் தீயின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தியிருப்பதாக பாகிஸ்தான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |