நேபாளத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகளை அள்ளுண்டு சென்ற வெள்ளம்
நேபாளத்தின் ராசுவா பகுதியில் உள்ள போதே கோஷி (Bhote Koshi) ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் குறைந்தது 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 291 பேர் வெளிநாட்டினர் என்றும் 93 பேர் நேபாள குடிமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல் முதற்கட்டமானது என்றும், காணாமல் போனவர்களின் நிலை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து சரிபார்த்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
105 பேர் இந்தியர்கள்
காணாமல் போன வெளிநாட்டினரில் 105 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, அஸ்திரேலியா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், 37 பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று காலை சுமார் 9 மணியளவில் போதே கோஷி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட தகவல்கள்
வெள்ளநீர் திபெத் பக்கத்திலிருந்து வந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்தாலும், வெள்ளத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
மேலும், பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு உள்ளிட்ட காரணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வெள்ளத்தால் ராசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே மற்றும் சியாஃப்ருபேசி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகள், சாலைகள், பாலங்கள், வாகனங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் நீர்மின் திட்டங்களும் சேதமடைந்துள்ளன எனவும் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |