யாழில் தொடரும் மர்ம மரணங்கள் - உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Crime
By Kajinthan
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது.
இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை கண்டுள்ளனர்.
அடையாளம் காணப்படவில்லை
அதன்பின்னர் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர்.

சடலமாக கரையொதுங்கிய குறித்த நபர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
குறித்த சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி