விடுதியில் இருந்து அழுகி வீங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்
விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலமானது அம்பலாங்கொட நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் அம்பலாங்கொட மகா பன்சல வீதியில் உள்ள விடுதியில் தனியாக தங்கியிருந்த 67 வயதுடைய ரோஹன் ஆரியதிலக என்பவராவார்.
அதிக துர்நாற்றம் வீசியது
இவர் பெந்தோட்டை சுற்றுலா விடுதி ஒன்றில் சிற்றுண்டி தயாரிப்பாளர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நபரின் உடலம் கண்டெடுக்கப்பட்ட போது, அது மிகவும் அழுகி, வீங்கி, துர்நாற்றம் வீசியதாகத் தெரிவித்த காவல்துறை, இவர் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறது.
குறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது தொடர்பாக அயலவர் ஒருவர் மேற்கொண்ட சோதனையின் போதே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10