யாழ். சிறைச்சாலைக்கு சென்ற நீதி அமைச்சர் - பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime
By Theepan Aug 26, 2026 01:51 AM GMT
Report

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளை நேரில் கண்காணிப்பதற்காக கள விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சம்பந்தப்பட்ட படை மற்றும் காவல்துறை அதிகாரிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல்களை நடத்தி, அவசர நிலைமைகளுக்கு ஒருங்கிணைந்து முகங்கொடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், சிறைச்சாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

தந்தையை அழைத்து சென்று தாக்கிய காவல்துறை! காவல்நிலையத்திற்கு சென்று மகன் செய்த செயல்

தந்தையை அழைத்து சென்று தாக்கிய காவல்துறை! காவல்நிலையத்திற்கு சென்று மகன் செய்த செயல்

கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

தொடர்ந்து சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்ட அமைச்சர், கைதிகளுடனும் கலந்துரையாடினார். இதன்போது சிறைச்சாலையின் வளங்கள், கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்தார்.

யாழ். சிறைச்சாலைக்கு சென்ற நீதி அமைச்சர் - பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு | Justice Minister Visits Jaffna Prison

இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணாநாதன் இளங்குமரன் மற்றும் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சிறைச்சாலை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அண்மையில் நாட்டின் பல சிறைச்சாலைகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நீதி அமைச்சர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஒன்டாரியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏரியாக மாற்றும் ட்ரம்ப்! தீவிரமடையும் கனடாவுடனான மோதல்

ஒன்டாரியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏரியாக மாற்றும் ட்ரம்ப்! தீவிரமடையும் கனடாவுடனான மோதல்

பத்மேவின் கைபேசிகளில் மறைந்திருந்த ஒன்பது அரசியல்வாதிகளின் தகவல்கள்! CID அறிக்கை

பத்மேவின் கைபேசிகளில் மறைந்திருந்த ஒன்பது அரசியல்வாதிகளின் தகவல்கள்! CID அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018