தந்தையை அழைத்து சென்று தாக்கிய காவல்துறை! காவல்நிலையத்திற்கு சென்று மகன் செய்த செயல்

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Aug 26, 2026 12:49 AM GMT
Report

சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பரவியதைத் தொடர்ந்து, அம்பலங்கொட காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்ட நபர் ஒருவர் காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஓகஸ்ட் 24 ஆம் திகதி இரவு வீடொன்றிற்கு அருகில் வைத்து தனது தந்தையிடம் தேசிய அடையாள அட்டையைக் கேட்டபோது, அதனை உடனடியாகக் காண்பிக்க முடியாததால் அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த நபரின் மகன் குற்றம் சாட்டியுள்ளார்.

அடையாள அட்டையை எடுத்துக் காட்டுவதற்காக அருகிலுள்ள வீட்டிற்கு அதிகாரிகளை அழைத்துச் செல்லத் தனது தந்தை முன்வந்த போதிலும், அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய நாடொன்றில் இருந்து புதிய குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்

முக்கிய நாடொன்றில் இருந்து புதிய குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்

காவல்துறையினர் விளக்கம்

மேலும், காவல் நிலையத்திலும் தனது தந்தை தாக்கப்பட்டதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டப்பட்டு, உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தையை அழைத்து சென்று தாக்கிய காவல்துறை! காவல்நிலையத்திற்கு சென்று மகன் செய்த செயல் | Son Alleges Ambalangoda Police Assaulted Father

எனினும், காவல்துறை இச்சம்பவம் குறித்து வேறுவிதமான விளக்கத்தை அளித்துள்ளது.

அதன்போது, குறிப்பிட்ட நபர் மதுபோதையில் வீதியில் முறையற்ற விதத்தில் செயற்பட்ட குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ள காவல்துறை, கைது செய்ய முயன்றபோது தப்பி ஓட முயன்றதால் கீழே விழுந்து காயமடைந்ததாகக் கூறியுள்ளது.

தனி விசாரணை

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் நேற்றைதியனம்(25) ஓகஸ்ட் அன்று பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, நீதிமன்ற மருத்துவ அதிகாரியால் பரிசோதிக்கப்பட்ட பின்னர் பலபிட்டிய மேலதிக நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, சம்பவம் தொடர்பாக காவல்துறைத் தலைமை ஆய்வாளரின் (IGP) உத்தரவின் பேரில், காலி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரின் (DIG) மேற்பார்வையில் தனி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் காவல்துறையினருக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் மற்றும் ஆதவ் அர்ஜீனாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை

தமிழக முதல்வர் மற்றும் ஆதவ் அர்ஜீனாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை

பத்மேவின் கைபேசிகளில் மறைந்திருந்த ஒன்பது அரசியல்வாதிகளின் தகவல்கள்! CID அறிக்கை

பத்மேவின் கைபேசிகளில் மறைந்திருந்த ஒன்பது அரசியல்வாதிகளின் தகவல்கள்! CID அறிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026