ஹோர்முஸ் நீரிணையில் இருந்த கண்ணிவெடிகள்! ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு
Donald Trump
Middle East
World
Strait of Hormuz
Iran-US Conflict
By Dhilak
ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதிக்குள் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடித்துச் சிதறடிக்கப்பட்டுவிட்டன என்று அமெரிக்கக் கடற்படை தன்னிடம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பூஜ்ய சகிப்புத்தன்மை
இந்நிலையில், புதிதாகக் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு கப்பலும் அல்லது படகும் உடனடியாகவும் துல்லியமாகவும் அழிக்கப்படும் என்று ஈரானுக்கு எச்சரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது எனறு அவர் அதில் தெரிவித்துள்ளனர்.

Image Credit: PBS
மேலும், நீரிணைியில் கண்ணிவெடிகள் வைப்பதற்கு எதிரான “பூஜ்ய சகிப்புத்தன்மை” (Zero Tolerance) கொள்கை முழு வீச்சில் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி