ரத்மலானை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானம்
Colombo
Accident
By Dharu
கொழும்பு - ரத்மலானையில் செஸ்னா 152 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து இன்று (25) இடம்பெற்றுள்ளதாக ரத்மலானை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கிள்றன.
ரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இகு ஒரு பயிற்சி விமானம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்மலானை விமான நிலையம்
குறித்த விமானம் ரத்மலானை விமான நிலையத்தில் இயங்கும் விமானப் பயிற்சிப் பாடசாலை ஒன்றுக்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி