மத்திய கிழக்கு மோதலில் முன்னேற்றம் கண்ட பேச்சுவார்த்தை! இலக்கில் இருந்து விலகும் ஹோர்மூஸ்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் மற்றும் அமைதிக்கான வழி ஆகியவற்றில் கவனம் செலுத்திய பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானும் ஈரானும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான் பயணத்தின் முடிவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை இந்த விடயத்தை தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவற்றில் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளும் கவனம் செலுத்தியதாக, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் ஈரானியத் ஜனாதிபதிக்கும் இடையேயான சந்திப்பு குறித்து பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சரின் பதிவு
பிராந்திய அமைதி மற்றும் இந்த சர்ச்சைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான வழி குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Field Marshal Syed Asim Munir and I had a very positive and productive meeting with the President of Iran. Our discussion focused on the Iran US conflict, tensions in the Middle East and the way forward, as well as the steps needed by both sides for restoration of the Islamabad… https://t.co/jt1wtlESCa
— Mohsin Naqvi (@MohsinnaqviC42) August 24, 2026
ஈரானிய ஜனாதிபதி தனது அரசாங்கத்தின் கண்ணோட்டத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டதுடன் மேலும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து நாங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டோம்," என்று முனிருடன் தெஹ்ரானுக்குச் சென்ற உள்துறை அமைச்சர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அலுவலக நேரத்திற்கு வெளியே கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு வெள்ளை மாளிகையும், அமெரிக்க வெளியுறவுத் துறையும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முனீர் தனது தெஹ்ரான் பயணத்திற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேசினார் என்று ரொய்ட்டர்ஸ் திங்களன்று செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |