சஞ்சீவவை படுகொலை செய்த நீதிமன்றத்திற்கே விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கெஹல்பத்தர !

CID - Sri Lanka Police Ganemulle sanjeewa Kehelbaddara Padme
By Dharu Aug 25, 2026 10:29 AM GMT
Report

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கெஹல்பத்தார பத்மேவை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 'கெஹல்பத்தாரா பத்மே'வை, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (25) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியது.

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை : வெளியான காரணம்

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை : வெளியான காரணம்

கனேமுல்ல சஞ்சீவ படுகொலை

இதன்போது இடம்பெற்ற விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். போதரகமவால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சஞ்சீவவை படுகொலை செய்த நீதிமன்றத்திற்கே விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கெஹல்பத்தர ! | Cid Produced Kehalpathara Padme In Court

பாதாள உலகக் குழுத் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ படுகொலையின் பிரதான சூத்திரதாரியாக கெஹெல்பத்தர பத்மே (பத்மசிறி பெரேரா) செயல்பட்டுள்ளார் என்பது காவல்துறை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இடம்பெற்ற விசாரணைகளில் 'கெஹெல்பத்தர பத்மே' சர்வதேச காவல்துறை (Interpol) மற்றும் இந்தோனேசிய காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின் மூலம் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் மற்றும் அவரது சகாக்கள் கடந்த 2025 ஆகஸ்ட் மாத இறுதியில் பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: நிலைப்பாட்டை அறிவித்த அரசாங்கம்

CID அதிகாரிகள் விசாரணை

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பத்மே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

சஞ்சீவவை படுகொலை செய்த நீதிமன்றத்திற்கே விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கெஹல்பத்தர ! | Cid Produced Kehalpathara Padme In Court

இவர் மீது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், பாரிய பணமோசடி, கொலைகள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதன்படி இந்த வழக்கில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து CID அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 பத்மே வழங்கிய தகவல்களின் அடிப்படையில் டி-56 ரக துப்பாக்கிகள், மைக்ரோ பிஸ்டல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

சஞ்சீவவை படுகொலை செய்த நீதிமன்றத்திற்கே விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கெஹல்பத்தர ! | Cid Produced Kehalpathara Padme In Court

நுவரெலியா பகுதியில் பத்மேவின் நிதியுதவியுடன் வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருள் தயாரிப்பு நிலையம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், சட்டவிரோத சொத்துக்கள் ஒழிப்பு பிரிவினரால் இவருக்குச் சொந்தமான 50 மில்லியன் ரூபா பெறுமதியான காணிகள் மற்றும் கட்டிடங்கள் முடக்கப்பட்டன.

இதன்படி தனது மகனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பத்மேவின் தாயார் தாக்கல் செய்த மனுவை அடுத்து, அவரை CID custody-லேயே வைத்திருக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான கால அவகாசம் இன்று நிறைவடைந்ததை அடுத்து, கொழும்பு நீதவான் நீதிமன்ற உத்தரவின்படி பத்மே செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கெஹல்பத்தர பத்மேவின் ஆபத்தான தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

கெஹல்பத்தர பத்மேவின் ஆபத்தான தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026