பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த தெல்லிப்பழை துர்க்கை அம்பாள்!
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய 2026 ஆம் ஆண்டுக்கான மகோற்சவ பெருவிழா கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
12 நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோற்சவத்தில்10 நாட்கள் சிறப்பான திருவிழாக்கள் நடைபெற்று 11 ஆம் நாளான இன்று (25) இரதோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிறப்பு பூசைகள்
இன்று காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான், துர்க்கை அம்மன், முருகப்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து வெளி வீதி எழுந்தருளி, தேரேறி பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க இரதோற்சவம் இனிதே நடைபெற்றது.
அத்துடன் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய 12ஆம் நாள் திருவிழாவான நாளை (26) தீர்த்தத் திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








