16 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது
பதினாறு இலட்சம் ரூபா பெறுமதியான 120,000 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கல்கிஸ்ஸ பகுதியில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் 31 வயதுடைய மொரட்டுவை, கொரலவெல்ல, பெரேரா மாவத்தையைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றப்புலனாய்வுப் பணியகப் பொறுப்பதிகாரி
இவர் இரத்மலானை கடற்கரைப் பகுதியில் வைத்து கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பணியகப் பொறுப்பதிகாரியின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்கிஸ்ஸ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9