ஒன்றுடன் ஒன்று மோதிய மோட்டார் சைக்கிள்கள்: 2 பிள்ளைகளின் தந்தை பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
Death
By Thulsi
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து வெள்ளவாய - மொனராகலை வீதியின் கிரிந்திஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது
விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் வெள்ளவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவர் வெள்ளவாய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

காயமடைந்த மற்றைய நபர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவாய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி