ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் வேட்பாளர்கள்
Election Commission of Sri Lanka
Election
By Jaso
ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப்போட்டி கடுமையாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் வேட்பாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் கூடிக்கொண்டே செல்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பிர் அனுரகுமார திஸநாயக்க ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவும் என தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அந்த வகையில் நேற்று முன்தினம் (02) ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணம் செலுத்தியுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

கே. ஆனந்த குலரத்ன, புதிய சிஹல உறுமய சார்பில் சனத் மனமேந்திர, ஜனசேத பெரமுன சார்பில் பத்தரமுல்லை சீலரத்ன தேரர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் கட்டுப் பணத்தை வைப்பிலிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி