ரணிலிடம் சென்ற எம்.பிக்களுக்கு அனுப்பப்பட்டகடிதம் : வெகுண்டெழுந்த இராஜாங்க அமைச்சர்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அவ்வாறு சென்ற எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானத்தில் மாற்றம் ஏற்படாது
கட்சியின் முடிவுகள், அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க பணிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா, சாகர காரியவசம் என்ன தீர்மானங்களை எடுத்தாலும் நாட்டு மக்களின் நலனுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படாது என குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |