இஸ்மாயில் ஹனியே படுகொலை: வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
ஹமாஸ் (Hamas) தலைவர் இஸ்மாயில் ஹனியே குறுகிய தூர ஏவுகணை ஒன்றால் கொல்லப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன
குறி்த்த தகவலை ஈரான் புரட்சிகர காவலர்கள் (Iran's Revolutionary Guards) அமைப்பு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளி குழுவின் அரசியல் தலைவரான இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) ஈரான் தலைநகர் தெஹ்ரானில் (Tehran) வைத்து கொல்லப்பட்டார்.
பரம்பரை எதிராளி
இதற்கிடையில், அண்மையில் நடந்த இந்த தாக்குதலுக்கு பிறகு ஈரானுக்கும் அதன் பரம்பரை எதிராளியான இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையிலேயே தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே 7 கிலோ எடையுள்ள குறுகிய தூர ஏவுகணையால் கொல்லப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவலர்கள் அமைப்பு கூறியுள்ளது.
சியோனிச ஆட்சி
அத்துடன் ஹமாஸ் தலைவரின் படுகொலைக்கான பழிவாங்கல் பதிலடி, சரியான நேரத்தில், சரியான இடத்தில் இஸ்ரேலுக்கு கொடுக்கப்படும் என்றும் ஈரானின் புரட்சிகர காவலர்கள் தெரிவித்துள்ளது.
மேலும் ஹனியே-யின் மரணத்திற்கு பயங்கரவாத சியோனிச ஆட்சியே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |