போர் நிறுத்தத்திற்கு சாத்தியமில்லை: பைடன் திட்டவட்டம்
ஹமாசின் (Hamas) தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டதனால், காசாவில் (Gaza) போர் நிறுத்தத்திற்கு சாத்தியமில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டதன் காரணமாக போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதா, என்று ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி
முன்னதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் (Benjamin Netanyahu) இந்த விடயம் குறித்து தாம் கலந்துரையாடியதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஈரானில் (Iran), ஹமாசின் தலைவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர், இஸ்ரேலுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளதுடன் பரந்த அளவில் மத்திய கிழக்கில் போர் விரிவடைவதற்கான அபாயமும் அதிகரித்துள்ளமை குறிதப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |