டித்வாவினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்க கடன் உதவி...! வெளியான அறிவிப்பு
அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கடன் உதவிகள் குறித்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
குறித்த சுற்றறிக்கை இன்று (28-01-2026) ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட தமது வர்த்தகங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தேவையான பணி மூலதனத்திற்காக புதிய கடன் வசதியும், மேலும் முதலீடு தேவைப்படும் வர்த்தகங்களுக்கு கடன் வசதியும் திறைசேரியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், பாதிக்கப்பட்ட வர்த்தகங்களை மீண்டும் தொடங்க மூன்று வீத வட்டி விகிதத்தில் பணி மூலதனமாக ரூபாய் 250,000 முதல் ரூபாய் 25,000,000 வரை கடன்களைப் பெற வங்கி கட்டமைப்பு மூலம் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கடன்களை ஆறு மாத கால அவகாசத்திற்கு உட்பட்டு மூன்று ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
வர்த்தக மீட்பு முதலீட்டுக் கடனாக பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு, 25 மில்லியன் ரூபா வரை ஐந்து வீத வட்டியில் 12 மாத சலுகைக் காலத்துடன் பத்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தக் கூடிய வகையில் வங்கிகள் மூலம் கடன்களைப் பெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |