பாடசாலை மாணவன் ஒருவரின் சர்ச்சைக்குரிய காணொளி! விசாரணைகள் குறித்து எழுந்துள்ள கேள்விகள்
தலைநகர் கொழும்பின் பிரபல பாடசாலையொன்றில் இடம்பெற்ற சம்பவம் தற்போது சமூகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
குறித்த பாடசாலையின் சிரேஷ்ட மாணவதலைவர் மற்றும் நான்கு ஆசிரியர்கள் தொடர்பில் பரப்பப்பட்டு வரும் செய்திகள் மற்றும் காணொளிகள் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய அண்மையில் குறித்த பாடசாலைக்கு நிகழ்வொன்றுக்கு சென்றிருந்தார்.
இவ்வாறு பிரதமர் சென்றிருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா? அல்லது இது தொடர்பில் எதிர்காலத்தில் விசாரணைகள் இடம்பெறுமா என்ற கேள்விகளும் தற்போது வலுத்துள்ளன.

உடனடியாக அறிக்கை
இந்த சம்பவத்திற்கு முன்னதாக, நாட்டில் முன்வைக்கப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், மறுசீரமைப்பில் ஆறாம் தர கல்வி தொகுதியில் காணப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு விடயமும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

இதன்படி குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் நாலக கலுவேவா கல்லூரியின் முதல்வருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சர்ச்சைக்குரிய காணொளி மற்றும் சம்பவம் குறித்து கல்வி அமைச்சு உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளதாகக் கூறிய கல்விச் செயலாளர், முதல்வர் வழங்கிய ஆரம்ப அறிக்கையின் அடிப்படையில் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் மேற்படி இந்த சம்பவத்தை தொடர்புபடுத்தி தென்னிலங்கை சமூக ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களில் பிரதமரையும் அரசாங்கத்தையும் இலக்காக வைத்து சேறுபூசும் நடவடிக்கையா என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், கொழும்பில் அமைந்துள்ள குறித்த பிரபல பாடசாலையில் சிரேஷ்ட மாணவத் தலைவன் உள்ளிட்ட நான்கு ஆசிரியர்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |