யாழில் இருந்து சென்ற தொடருந்துடன் மோதுண்ட வாகனம்! நூலிழையில் உயிர் தப்பிய பெண்
வவுனியா (Vavuniya) இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (27.01.2026) வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வவுனியா தாண்டிக்குளம் தொடருந்து கடவையினை தொடருந்து சமிக்கையை மீறி பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
கிளிநொச்சி
கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் தொடருந்து கடவையை கடக்க முட்பட்ட முதியவர், அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி தொடருந்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் சம்பவத்தில் கிளிநொச்சி ஆனந்தபுரம் சேர்ந்த சபாபதி என்ற 82 வயதுடைய முதியவரே பரிதாபகரமாக உயிரிழந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணை
இதன்போது யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் கிடாச்சூரி சாஸ்திரிகூழாங்குளத்தை சேர்ந்த அல்பிரட் ஜெயராஜ் திலகவதி (வயது - 52) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |