சிறிதரன் மீதான சூமோ பசூக்கா அடிகள் வெடிக்குமா?
பூகோள நிலவரங்களில் கடந்தவாரம் அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு தனது புதிய வரி அச்சுறுத்தல்களை விடுத்தபோது ஐரோப்பாவும் வேறுவழியின்றி தனது Trade bazooka எனப்படும் வணிக பசூக்காவை அடிக்குத் தயாராகிய விடயம் நினைவிருக்ககூடும்.
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கப்படைத்துறையால் பரவலாக பயன்படுத்தப்பட்ட அந்த நாட்டின் புதுமையான ஆயுத கண்டுபிடிப்பான இந்த பசூக்கா அடிகள் தமிழர் தாயகத்தின் விடுதலை போராட்ட தடத்திலும் இருந்தன.
அமெரிக்க கண்டுபிடிப்பான் இந்த பசூக்காவை மையப்படுத்தி பதத்தை அமெரிக்கா மீதான ஒரு எதிர்வினைக்குரிய செயற்பாட்டடில் பயன்படுத்துவது உற்றுநோக்கப்படும் என்பதால் இந்த வணிக பசூக்கா என்ற பதத்தை ஐரோப்பிய ஒன்றியம் கையில் எடுத்திருந்தது.
ஐரோப்பாவின் வணிக பசூக்கா சற்றுத்தணிய இன்று சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பன்டாகரடி ராஜதந்திர அடிகளையும் காணமுடிந்தது. “
சீனா தைவானைத் தாக்கினால் ஜப்பான் அதனைத்தடுக்க இராணுவ ரீதியாக தலையிடும் என ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகைச்சி தெரிவித்த கருத்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை கொதிநிலைப்படுத்தியதால் சீனா கடனாக கொடுத்த இரண்டு பெரிய பாண்டா கரடிகளை இன்று ஜப்பான் திருப்ப அனுப்ப வேண்டியதாயிற்று.
இவ்வாறாக உலக மட்டத்தில் பசூக்கா ராஜதந்திரம் மற்றும் பண்டா எகஸிற் போன்ற உயர்மட்ட ராஜந்திரங்கள் இருக்க தமிழர்களின் அரசியல்பரப்பில் மசுமந்திரன் பிடியில் உள்ள தமிழரசுக்கட்சி இப்போது சிறிதரனை நோக்கி இரண்டு முறை பதவிப்பறிப்புகள் என்ற அதிகாரத்துவ பசூக்கா அடிகளை அடிக்கிறது.
சிறிதரனை தமிழரசில் இருந்து முற்றாக கழற்றிவிட்டால் அது முழுக்க முழுக்கு தனக்கு லாபமாக மாறும் என்பதை அறிந்த சுமந்திரன் இதனை திட்டமிட்டு நகர்த்ததலைப்படும் நிலையில் இந்த விடயங்களை தொட்டுவருகிறது செய்திவீச்சு.....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |