இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கி தனது 'ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி 7.75 சதவீதமாகத் தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
நேற்று (27) நடைபெற்ற மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் முன்னேற்றங்கள், உள்நாட்டு முன்னணி மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் குறித்த கண்ணோட்டத்தை கவனமாகக் கருத்தில் கொண்ட பிறகு, நாணயக் கொள்கை சபை இந்த முடிவுக்கு வந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டது.
பணவீக்க இலக்கு
தற்போதைய பணவியல் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை 5 சதவீதம் என்ற இலக்கை நோக்கி நகர்த்த உதவும் என்று அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.

பணவீக்கம் இலக்கைச் சுற்றி நிலைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு பொருத்தமான கொள்கை நடவடிக்கைகளை செயற்படுத்தத் தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் பொருளாதாரம் அதன் திறனை அடைய உதவுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |