323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரம்! விசாரணைகள் தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் ஆய்வு இல்லாமல் விடுவிக்கப்பட்டதை விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு, விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பித்து, முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க குழு ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 2.00 மணிக்கு கூடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
விசாரணைக்கு அழைக்கப்படவுள்ள தரப்பு
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் குழு முதல் முறையாக 2026 ஜனவரி 21 அன்று கூடியபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, குழு 2026 ஜனவரி இனறு(28) புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் கூட உள்ளது.
இந்த முதல் கூட்டத்தில், குழு எவ்வாறு தொடர வேண்டும், எந்தெந்த தரப்பினரை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்து முதற்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது, மேலும் குழுவின் உறுப்பினர்களும் இந்த விடயத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளானர்.
இதன்படி, குழுத் தலைவர் விசாரணை மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |