அதிர்ச்சியில் இந்தியா..! விழுந்து நொறுங்கிய விமானம்: துணை முதலமைச்சர் பலி
மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்குள்ளான நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பையிலிருந்து புறப்பட்ட அஜித் பவார் பயணித்த விமானம், இன்று (28.01.2026) காலை 8:45 மணியளவில் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானது.
தீப்பிடித்து எரிந்த விமானம்
விபத்தைத் தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானத்தில் அஜித் பவார் உட்பட விமானிகள் மற்றும் உதவியாளர்கள் என 4 பேர் இருந்துள்ளனர்.
#WATCH | A plane crash reported in Baramati, Maharashtra. More details awaited.
— ANI (@ANI) January 28, 2026
Visuals from the spot. pic.twitter.com/xkx0vtY5cp
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்ததை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையில் இருந்து விமானம் புறப்பட்ட கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, காலை 9 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
துணை முதல்வர் அஜித் பவாரின் திடீர் மறைவு மகாராஷ்டிர அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்தியப் பிரதமர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |