நாட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்...! வெளியான தகவல்
2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை ஜனவரி 15 ஆம் திகதி பதிவாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
இதனடிப்படையில், அன்றையதினம் 10,483 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த 25 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு இந்தியாவிலிருந்து 41,603 சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக ரஷ்யாவிலிருந்து 22,876 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,329 பேரும் மற்றும் ஜேர்மனியிலிருந்து 14,431 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்... 23 மணி நேரம் முன்