அதிகரிக்கும் போர் பதற்றம்: வளைகுடா விரையும் அமெரிக்க போர்க் கப்பல்கள்
இஸ்ரேலில் (Israel) ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா தனது ஜெட் போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்களை வளைகுடா நோக்கி அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இஸ்ரேல் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், பதிலடி வழங்கும் அச்சநிலையும் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ஆதரவை அதிகரிக்க அமெரிக்கா குறித்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகம் பெண்டகன் (Pentagon) தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தலைவர்
ஹமாஸ் தலைவர் ஹனியே மற்றும் ஹிஸ்புல்லா இராணுவ தளபதி ஃபுவாட் ஷுகர் (Fuad Shukr) ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக ஹிஸ்புல்லா (Hezbollah) தலைவர் ஹசன் நஸ்ரல்லா (Hassan Nasrallah) இஸ்ரேலுக்கு எதிரான தனது எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து லெபனான் (Lebanon), யேமன் (Yemen) மற்றும் ஜோர்தான் (Jordan) உட்பட, மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் மீது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
எனவே, ஷுகரைக் கொன்றதன் மூலம் ஒரு புதிய போர் ஆரம்பமாகியுள்ளது என ஹசன் கூறியமை சர்வதேசத்தை அச்சநிலைக்கு தள்ளியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர், '' தமது நாடு எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது'' என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |