ரணிலுக்கு ஆதரவளிக்கும் அமைச்சர்கள் : மொட்டுவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பகா, அநுராதபுரம், மாத்தறை, காலி ஆகிய மாவட்டங்களின் தலைவர்கள் பதவிகளை வகித்த மூன்று அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(ranil wickremesinghe)வழங்கிய ஆதரவின் காரணமாக அந்தப் பதவிகளுக்கு நான்கு பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் மாவட்ட தலைவராக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு(s.m. Chandrasena) பதிலாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட தலைவர்கள் மாற்றம்
மேலும், கம்பகா மாவட்ட தலைவராக இருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு(prasanna ranatunga) பதிலாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த(Indika Anuruddha) நியமிக்கப்பட்டுள்ளதுடன், அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கு(Kanchana Wijesekera) பதிலாக மாத்தறை மாவட்ட தலைமைத்துவ பணிகளை கவனிக்க நாடாளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க(Nipuna Ranawaka) நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், காலி மாவட்ட தலைவராக கடமையாற்றிய ரமேஷ் பத்திரனவுக்கு(Ramesh Pathirana) பதிலாக அந்த மாவட்டத்தில் பணியாற்றுவதற்கு இராஜாங்க அமைச்சர் மொகான் பிரியதர்ஷன டி சில்வா(Mohan Priyadarshana de Silva) நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |