சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் ரணில் அல்ல: உதயங்க வீரதுங்க
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் அதிபர் ரணில் விக்ரமசிங்க அல்ல எனவும் மற்றுமொரு வேட்பாளரே களமிறக்கப்படுவார் என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை ராஜபக்ச குடும்பத்தின் பேச்சாளர் என கருதப்படும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மொட்டுக் கட்சியின் வேட்பாளர் ரணில் அல்ல என்பது அவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளமையினால் மற்றுமொரு கட்சி கூட்டணியில்தான் ரணில் களமிறங்க வேண்டிவரும்.
மொட்டுக் கட்சி
மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பட்டியலில் தம்மிக்க பெரேரா இன்னும் உள்ளதுடன் பஸில் மற்றும் நாமல் ஆகியோருடன் அவர் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
முதலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மொட்டுக் கட்சி விடுத்த கோரிக்கையை அதிபர் ஏற்காததால் இது பற்றி அதிபர் ரணிலுக்குத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளுள் பஸில் ராஜபக்சவுடனேயே இந்தியாவுக்குக் கௌரவமான உறவு உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |