கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகிய14 வயது சிறுமி!
Sri Lanka Police
Kalutara
By Laksi
களுத்துறை பகுதியில்14 வயது சிறுமி ஒருவர் துறவறத்துக்கு செல்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு தலைமறைவாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பேருவளை, வளதாறை, தசகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சிறுமி ஒருவரே இதன்போது காணாமல் போயுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் பேருவளை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்தே சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சிறுமி கடந்த (25)ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது தாய் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பேருவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 4 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி