கிளிநொச்சியில் மற்றுமொரு கொடூரம் : 14 வயது சிறுமிக்கு மதுபானம் வழங்கி பாலியல் அத்துமீறல்
கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட திருவையாறு பகுதியில், 14 வயதுடைய சிறுமியொருவருக்கு மதுபானம் வழங்கிப் பாலியல் வன்கொடுமை புரிந்த குற்றச்சாட்டில் 19 வயதுடைய இரு இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவ சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றின் உத்தரவு
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரையும் காவல்துறையினர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி (23.11.2026) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த தீபாவளி தினத்தன்று கிளிநொச்சியில் 26 வயதுடைய இளம்பெண்,ஏழு பேர் கொண்ட இளைஞர் குழுவினரால் கூட்டு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அடங்க முன்னரே மற்றுமொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |