சிறிலங்கா முப்படையினர் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்
சிறிலங்காவின்(sri lanka) முப்படைகளைச் சேர்ந்த சுமார் 1,400 வாகனங்கள் புகை பரிசோதனைகளில் தோல்வியடைந்துள்ளதாக வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.
முப்படைகளின் முகாம்களில் ஆய்வு செய்யப்பட்ட ஆறாயிரம் வாகனங்களில், 1,400 வாகனங்கள் முதல் சுற்று சோதனையில் தோல்வியடைந்ததாக மோட்டார் வாகனத் துறையின் வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியத்தின் இயக்குநர் பொறியாளர் தாசுன் கமகே தெரிவித்தார்.
முப்படை வாகனங்களும் ஆய்வு
கரும்புகையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் நோக்கில் 'சுத்தமான இலங்கை' திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், முப்படை வாகன ஆய்வுகளும் தொடங்கப்பட்டுள்ளன.
வாகன உமிழ்வு அறக்கட்டளை நிதியத்திலிருந்து பத்து தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
