கடந்த வருடம் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மாடுகள் : பால் உற்பத்தியும் குறைந்தது
நாட்டின் பொருளாதார மற்றும் சமூக தரவுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த ஆண்டில் (2022) 148,000 மாடுகள் வெட்டப்பட்டுள்ளன.
இந்த புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டில் 4000 மாடுகள் குறைவாக கொல்லப்பட்டுள்ளன. 2021 இல் இலங்கையில் 152,000 மாடுகள் கொல்லப்பட்டன.
குறைந்தது பால் உற்பத்தி
2022 ஆம் ஆண்டளவில் இலங்கையில் பசுக்களின் எண்ணிக்கை 1,128,000 ஆகவும் பால் உற்பத்தி 419 மில்லியன் லீற்றராகவும் இருந்தது. பால் உற்பத்தியும் 2021ஐ விட 2022ல் ஆறு மில்லியன் லீட்டர் குறைந்துள்ளது.
செம்மறி,பன்றிகளும் கொலை
மேலும், கடந்த ஆண்டில் 43,000 செம்மறி ஆடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் 18,000 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் பன்றிகள் வெட்டப்படுவது பாதியாக குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், 33000 பன்றிகள் வெட்டப்பட்டன.