கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்: 15 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளுக்கு 15 மணித்தியால நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (11) காலை 8 மணி வரையான 15 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டினை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஏற்பாடுகள்
அம்பத்தலே நீர் வழங்கல் முறைமையில் மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாகவே இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் வெட்டுக் காலத்தில் நீரைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்களின் ஒத்துழைப்பு
மேலும், நீர் வெட்டுக் காலத்திலும் அதற்குப் பின்னரும் தண்ணீரைச் சேமிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட காரணங்களுக்கு அமைய நாளை மாலை முதல் 15 மணி நேரத்திற்கு நீர் வெட்டினை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |