சாலேக்கு கிட்டிய நீதிமன்ற Punch...! பஞ்சாக பறந்த நாடகங்கள்
சிறிலங்காவில் வெளிப்படும் அதிரடி கைதுகளின் புதிய அத்தியாயம் ஒன்று இன்று காலை 10:05 க்கு சிறிலங்காவின் கடற்போரணிகளின் அட்மிரல் விளிப்பு முகமும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான வசந்த கரன்னகொடாவின் கைதுடன் பதிவானது.
கடந்த 2022 யூலையில் இதே காலம் ராஜபக்சக்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து துரத்தியடிக்கும் அரகலயவின் கோட்டா கோ ஹோம் போராட்டத்தின் உச்சக்கட்டமாக இருந்த பின்னிணியில் அந்த உச்சக்கட்டத்தின் 4 ஆம் ஆண்டு முடிவு அண்மிக்கும் நிலையில் அநுர கோ ஹோம் என்ற கொட்டொலியை தூக்கிப்பிடிக்கும் ஒரு சிறிய கூட்டத்தின் சிலுசிலுப்பு கொழும்பில் ஆங்காங்கே எட்டிப்பார்த்து பிசுபிசுத்தது.
இந்த சிலுசிலுப்புகள் சிறிலங்காவின் முன்னாள் உளவுத்துறைத் தலை சுரேஷ் சாலே போன்றவர்களை காக்க துடித்தாலும் நேற்று முன்தினம் சாலேக்கு நீதிமன்றம் அடுத்தடுத்து அடிகளை வழங்கியதால் எவையும் நடக்கவில்லை.
இறுதியில் சாலே தான் தனது மூன்று வார உண்ணாவிரதப் போராட்ட பருப்பு இனியும் வேகாது, மாரடைப்பு கதையும் இனி எடுபடாது என்பதை தெரிந்து வேறுவழியின்றி உண்ணாநிலையை முடித்து மருத்துவமனையில் இருந்து மீண்டும் சிறை அறைக்கு திரும்ப வேண்டிய யதார்த்த்தை கண்டுகொண்ட நிலையில் இந்த விடயங்களை தழுவி வருகிறது ஐபிசி தமிழின் கீழுள்ள காணொளி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்